ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவருமான டாவெங்வா முக்லானி(Tavengwa Mukuhlani) இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப்போட்டிகள், கிரிக்கெட்டுக்கு நன்மை செய்வது மட்டுமின்றி, ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புக்கு தேவையான நிதியையும் பெற்றுத் தரும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தாம், ஆசிய கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது.
அடுத்து 2007 இல் இந்தியாவில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்றது. இந்த இரண்டு முறைகளிலும்,ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து விளையாடியிருந்தனர்.
எனவே, மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப்போட்டிகள் நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005 இன் ஆப்பிரிக்க - ஆசிய கிண்ண போட்டிகளின்போது, ஆசிய அணியில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககார, விரேந்தர் சேவாக், சாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர், சஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.
2007 இல் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப் போட்டிக்கான ஆசிய அணியில் மஹேல ஜெயவர்த்தன தலைமையில், வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்ய, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், மஹேந்திரசிங் தோனி ஆகியோர் பங்கேற்றனர்.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments