Ticker

6/recent/ticker-posts

Ad Code

”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!


நாடாளுமன்ற தேர்தலின் போது, ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார். பின்னர் வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.பிறகு அவர் வயநாடு தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு எண்ணப்பட்டது. இதில், பிரியங்கா காந்தி 6 லட்சத்து 22 ஆயிரத்து 38 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 1 லட்சத்து 99 ஆயிரத்து 39 வாக்குகள் பெற்று கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே 5 லட்சத்து 12 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து முதல்முறையாக நாடாளுமன்றத்தில் செல்கிறார் பிரியங்கா காந்தி.

இந்நிலையில், மிகப்பெரிய வெற்றியை அளித்து கௌரவித்துள்ள வயநாடு மக்களுக்கு நன்றி பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ’வயநாட்டில் தனக்கு கிடைத்த பெற்றி மக்களுக்கான வெற்றி என்பதை நிரூபிக்கும் வகையில் தனது பணிகள் இருக்கும்.

மக்களின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் . நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுவேன்” என தெரிவித்துள்ளார்.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments