Ticker

6/recent/ticker-posts

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்!

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

"கடந்த சில நாட்களாக, சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதை நான் அவதானித்தேன். வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல். அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவதைக் கண்டோம். குறிப்பாக டெங்கு குறித்து அவதானமாக இருக்க வேண்டும். டெங்கு கொடியது என்பதால், 0.1% வீதமானவர்கள் உயிரிழக்கலாம். எனவே வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்."

"சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சலைப் பார்க்கிறோம். இது இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாகலாம். இது இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வேறொரு வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் இது வைரஸ் காய்ச்சல். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்."

adaderana



 Ai SONGS

 



Post a Comment

0 Comments