ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை.. பள்ளிகளை மூடும் பாகிஸ்தான் அரசு..!

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை.. பள்ளிகளை மூடும் பாகிஸ்தான் அரசு..!

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர கூட பணம் இல்லை என்பதால் பாகிஸ்தான் அரசு பள்ளிகளை மூடி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு கட்டிடங்களை விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை என்பதால், சில பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் 541 ஆரம்ப பள்ளிகள், 2200 பெண்கள் சமூக பள்ளிகளில் இருக்கும் நிலையில், இதில் ஆசிரியர்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும்.. ஆனால், 21 ஆயிரம் ரூபாய் மாதம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு மாதங்களாக அந்த ஊதியமும் கொடுக்கப்படவில்லை என்றும், அரசிடம் இருந்து நிதி வராததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பள்ளிகளுக்கு சொந்த கட்டடம் இல்லை என்பதால், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், வாடகை மற்றும் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பதால் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அந்நாட்டின் மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post