Ticker

6/recent/ticker-posts

Ad Code



"ஜெர்மனியின் கண்மூடித்தனமான தவறு"-ஈரான்குற்றச்சாட்டு

மேற்கு ஐரோப்பியாவில் வசிக்கும் ஈரானிய குடிமக்களுக்கு தூதரக சேவைகளை மறுத்த ஜேர்மனியின் நடவடிக்கையின் மீதான குற்றச்சாட்டு விவகாரங்களை விசாரிப்பதற்காக ஈரானில் உள்ள ஜேர்மன் தூதுவரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் வியாழன் அன்று அழைத்தது, 

இந்த நடவடிக்கை "ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நியாயப்படுத்த முடியாதது" என்று கூறியது.

" ஈரான் தூதரகங்களின் பணிகளை நிறுத்துவதில் மத்திய ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நியாயப்படுத்த முடியாதது" என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிராங்பேர்ட், ஹாம்பர்க் மற்றும் முனிச் ஆகிய இடங்களில் உள்ள ஈரானின் தூதரகங்களின் முக்கிய செயல்பாடுகள், ஜெர்மனியில் வசிக்கும் ஈரானியர்களுக்கு தூதரக சேவைகளை வழங்குவதும், அந்நாட்டில் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் ஆகும், ஆனால் இந்த இராஜதந்திர மையங்களை மூடுவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவு "வேண்டுமென்றே" திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றது.என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.

"இந்த நடவடிக்கை ஈரானிய மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு இடையிலான மிக முக்கியமான மற்றும் பழமையான நட்பை  துண்டிப்பதாக" அமைச்சகம் கூறியது.

ஈரானிய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது, "ஜெர்மனியின் இந்த ஆக்கமற்ற மற்றும் மோதல் அணுகுமுறை ஒரு பெரிய கண்மூடித்தனமான தவறு, அதன் விளைவுகளுக்கு ஜேர்மன் அரசாங்கமே பொறுப்பாகும்."



 Ai SONGS

 



Post a Comment

0 Comments