
சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் "சரியான பாதையில்" முன்னேறி வருவதாக சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சி (எஃப்ஐஐ) உச்சி மாநாட்டில் பின் ஃபர்ஹான் இவ்வாறு கூறினார்.
வடக்கு காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளை,வன்முறை, இனப்படுகொலையின் வடிவமாக மட்டுமே விவரிக்க முடியும் என்றார்.
"பாலஸ்தீனிய நாடு இல்லாமல் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம்" என்ற சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டை பின் ஃபர்ஹான் மீண்டும் வலியுறுத்தினார், அந்த முன்மொழியப்பட்ட படியில், சவுதி அரேபியா இயல்புநிலைக்கு முன்னோக்கிச் செல்வதற்கு முன், "நிலைமை சீராகும் வரை காத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
"வடக்கில் (காசா) இப்போது என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம், அங்கு மனிதாபிமானப் பொருட்களுக்கான அணுகலை முழுமையாக தடை செய்து, குடிமக்கள் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பான இடங்களை கண்டுபிடிப்பதற்கும் எந்த பாதையும் இல்லாமல் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதலை இஸ்ரேல் நடத்துகின்றது.
இது இனப்படுகொலையின் ஒரு வடிவம்," என்று அவர் கூறினார்.
"இது நிச்சயமாக மனிதாபிமான சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரானது, மேலும் வன்முறையின் தொடர்ச்சியான தீவிரத்தைக் காட்டுகின்றது."
வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய சாத்தியமான அமெரிக்க-சவூதி ஒப்பந்தங்கள் "எந்த மூன்றாம் தரப்பினருடனும் பிணைக்கப்படவில்லை" மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கும் இந்தப் போருக்கும் எந்தவித பாதிப்பும் எங்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments