
அமெரிக்காவில் அடுத்த அதிபராகவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தமது நிர்வாகத்தின்கீழ் செயல்பட நியமனம் பெற்ற சிலருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் போலி வெடிகுண்டு மிரட்டல்களும் அடங்கும்.
காவல்துறையினர் பாதிக்கப்பட்டோரின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்த நிலை ஏற்பட்டதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.
வீடமைப்பு, வேளாண்மை, தொழில்துறை போன்ற பிரிவுகளை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதராகத் தெரிவுசெய்யப்பட்டவருக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
கடந்த இரண்டு நாள்களாக நடந்த சம்பவங்களை விசாரிப்பதாய் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) மிரட்டல் சம்பவங்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டிருப்பதாய் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.
நிலைமையை அணுக்கமாகக் கவனிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments