Ticker

6/recent/ticker-posts

அசைவம் சாப்பிடக்கூடாது.. துன்புறுத்திய காதலன் - பெண் விமானி எடுத்த விபரீத முடிவு!


காதலன் துன்புறுத்தியதால் பெண் விமானி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் மரோல் கனக்கியா மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிருஷ்டி துலி(25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார். இப்பெண்ணின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகும்.

இந்த நிலையில், பெண் விமானி சிருஷ்டி அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் சிருஷ்டி துலியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், விமானி சிருஷ்டி துலியின் காதலனான டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா பண்டிட்(27) என்பவர் அவருடன் தங்கு வந்தது தெரியவந்தது.

அவர் அடிக்கடி சிருஷ்டி துலியை பொதுஇடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியதும், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தி வந்தாகவும் கூறப்படுகிறது. இதில் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிருஷ்டி துலியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் ஆதித்யா பண்டிட்டை போலீசார் கைது செய்துள்ளனர். விமானி சிருஷ்டி துலி, அவரது காதலன் ஆதித்யா பண்டிட்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு விமான ஒட்டுநர் லைசென்ஸ் பெறுவதற்காக பயிற்சிக்கு சென்ற போது சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது,. பயிற்சி முடித்து சிருஷ்டி துலி மும்பைக்கு வேலை நிமிர்த்தமாக வந்துள்ளார். அங்கு இருவரும் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார்கள்.

மேலும், ஆதித்யா பண்டிட் தனது காதலி சிருஷ்டி துலி வசித்து வந்த அடுக்குமாடியில் சம்பவம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வசித்தாராம். காதலியை பொதுஇடங்களில் அசிங்கப்படுத்துவதும்,

அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தினாராம். இதனால் இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த காதலன் மீது வழக்கு பதிவு செய்து தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

0 Comments