2020 பொதுத் தேர்தலில் கம்பஹாவிலிருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பெத்தும் கார்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேச்சைக் குழுக்களைக் கடந்து, 5780 வாக்குகளைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்த இவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
42 வயதுடைய பெத்தும் கர்னர், களனியில் பிறந்தவர். களனி வெதமுல்லை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, க.பொ.த சா/தப் பரீட்சையில் சித்தியடைந்து, உயர்தரத்திற்காக உயிரியலைக் கற்க கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தில் நுழைந்துள்ளார்.
2001ல் உயிரியலுக்கான மிக உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற பெத்தும், 2002 முதல் 2008 வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவம் பயின்றார்.
மருத்துவப் படிப்பை முடித்ததும் அவர் இராணுவத்தில் லெப்டினன்டாகச் சேர்ந்தார், அங்கு போரின் கடைசிக் கட்டத்தில் மருத்துவர்கள் தேவைப்பட்டபோது, 58வது அணியின் முன்னரங்கில் பணிபுரிந்த அவர், மனிதாபிமான நடவடிக்கை முடியும் வரை நூற்றுக்கணக்கான போர்வீரர்களுக்கு தனது கைகளால் சிகிச்சை அளித்தவராவார்.
அதன் பின்னர் போரின்போது மருத்துவராகப் பணியாற்றிய தனது அனுபவங்களை "யுத்த பூமியில் மருத்துவ மகிமை" என்ற நூலாக வெளியிட்டதுடன், யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவத்திற்கான தனது கடமையை நிறைவேற்றியதில் அவர் மனத் திருப்தி கண்டார். அதன் பின்னர் அவர் 2010ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றினார்.
பல வருடங்கள் அங்கு வாழ்ந்த அவர், சிங்கப்பூரை எப்படி உலகின் தலைசிறந்த தேசங்களில் ஒன்றாக மாற்றினார்கள் என்பதை இலங்கையர்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் "சிங்கப்பூர் அதிசயத்திலிருந்து சில பாடங்கள்" என்ற நூலை எழுதினார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் போது மாதந்தோறும் இலங்கைக்கு வந்த அவர்,பல்வேறு சமூக சேவைத் திட்டங்களை செயல்படுத்தினார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் பலவற்றிற்கு அரசியல் தீர்வுகள் தேவை என்பதையும், இலங்கையின் அரசியல் களம் அதற்கான சாதகமான சூழலை வழங்கவில்லை என்பதையும் உணர்ந்தார்.
முறைகேடான பொது நிர்வாகம் மற்றும் ஊழல் அரசியல் அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த விரக்தி, 2017ல் அவரை அரசியலுக்கள் நுழையத் தூண்டியது, அப்போதிருந்த அரசியல் நிலைமைகளுக்கு எதிராகச் சென்று சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண "தேசிய பசுமை முன்னணி" என்ற பெயரில் சுயேச்சைக் கட்சி ஒன்றை உருவாக்கினார்.
தேசிய பசுமை முன்னணியின் கொள்கைகள் மற்றும் புதிய நம்பிக்கைக்கான மாற்றத்தை விரும்பிய தேசபக்தி கொண்ட பல இளம் தலைவர்கள் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, பெத்தும் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். அவர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் பொது நிர்வாகத்தில் பட்டப்படிப்பைப் படிக்கத் தொடங்கி, தான் பெற்ற அறிவின் அடிப்படையில், சமூக ஊடகங்கள் மூலம் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை மக்களுக்குத் தெரிவிக்கலானார்.
31.12.2021ல் அவர் உருவாக்கிய Go Home Gota ஹேஷ்டேக்கின் மூலம் ஆயிரக்கணக்கான சமூக ஊடக ஆர்வலர்கள் Go Home Gota சமூக ஊடக பிரச்சாரத்தில் இணைந்தனர். இவ்வாறு தொடங்கப்பட்ட இலங்கையின் ஊழல் அரசியல் அமைப்புக்கு எதிரான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராட்ட அமைப்புக்களிலுடன் இவரது அமைப்பும் இணைந்து ஈடுபட்டதன் காரணமாகத்தான் இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டது என்பதனை எவரும் மறந்துவிட முடியாது.
Go Home Gota சமூக ஊடக பிரச்சாரத்தில் ஈடுபட்டதனை மையப்படுத்தி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாதுகாப்பு அதிகாரிகள் பெத்துமின் வீட்டிற்கு வந்தபோது அவர் இங்கிலாந்தில் இருந்தார். தனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தபோதிலும், தாய்நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தில் தீவிர பங்காளியாக மாற வேண்டிய வலுவான தேவையின் காரணமாக அவர் இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 மில்லியன் மக்களின் தலைவிதியை முடிவு செய்யப்படும் எதிர்வரும் 14ம் திகதி, இப்போதிருக்கின்ற நாட்டை விட சிறந்த நாடொன்றை உருவாக்கும் பணியில் தானும் ஒரு பங்காளராகச் சேர்ந்து கொள்ளும் நோக்கில் கொழும்பு மாவட்டத்திலிருந்து களமிறங்கியுள்ள டாக்டர் பெத்தும் கார்னர், ஐக்கிய ஜனநாயகக் குரலினூடாக மைக் சின்னத்தில் 11ம் இலக்கத்தில் கொழும்பு மக்களிடம் வாக்குக் கேட்கின்றார்.
ஓர் இளைஞராக, மருத்துவராக, போர்வீரராக, சுற்றுச்சூழல் ஆர்வலராக, எழுத்தாளராக, பேச்சாளராக, ஏழைகளின் நண்பனாக
மனிதாபிமானத்துடன் நாட்டுக்கு உதவ முயற்சிக்கும் தகுதியான ஓர் இளம் தலைவர் டாக்டர் பெத்தும் கார்னர் என்பதால், அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழையவைக்கும் பொறுப்பு கொழும்புவாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கைகளில்தான் உள்ளது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments