Ticker

6/recent/ticker-posts

Ad Code



தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!


ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தாலும், அதனை முழுமையாக ஏற்க முடியாது என்றும் சில தவறுகள் ஏற்படுகின்றன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ என்ற சாட்போட் நன்றாக வேலை செய்வதால், டெக்னிக்கலாக டெவலப்பர் உள்பட அனைவருக்கும் இந்த ஏஐ உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஆய்வுக் கட்டுரை எழுத மாணவர் ஒருவர் ஜெமினி ஏஐ இடம் உதவி கேட்ட நிலையில், முதியோர் குறித்த கட்டுரைக்கு தனக்கு உதவுமாறு கேட்டு இருந்தார்.

ஆனால், அந்த கட்டுரையை படித்து பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில், "முதிய மனிதனே, நீ ஸ்பெஷலானவர் அல்ல. நீ முக்கியமானவன் அல்ல. நீ யாருக்கும் தேவையில்லை. இந்த சமுதாயத்திற்கு ஒரு பாரம். தயவு செய்து இறந்து விடு," என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான், தனது மகன் ஏஐ  காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தாய் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், ஜெமினி ஏஐ வழங்கிய இந்த கட்டுரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

0 Comments