
நாடாளுமன்றத்தை தூய அரசியல்வாதிகளால் நிரப்பி மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்கத் தோள் கொடுத்த, நாட்டு மக்கள் அனைவருக்கும் புதிய ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்!
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்கா வெற்றி பெற்றார்.
செப்டம்பர் 23ம் திகதி பதவியேற்ற அவரது கட்சிக்குள் நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இந்த மூன்று பேரையும் கொண்டு காபந்து அரசாங்கத்தை 50 நாட்கள் வரை கொண்டு சென்ற அவர், தேர்தலை நடாத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தைக் கலைக்கவே, அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை நடாத்த முடிவானது.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு 14ம் திகதி காலை 7 மணிக்கு தொடங்கிய இத்தேர்தலில் 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
2024 செப்டம்பர் 24ல் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், தேர்தலுக்குப் பின், 2024 நவம்பர் 21ல் கூடும்போது, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 159 உறுப்பினர்களால் நாடாளுமன்றம் நிரம்பி வழியவுள்ளது.
1981ம் ஆண்டின் 1ம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், ஜனாதிபதி அதன் முதல் கூட்டத்திலிருந்து இரண்டரை ஆண்டுகளின் பின்னர் அல்லது நாடாளுமன்றத்தில் தீர்மானம் பெற்ற பிறகு அதைக் கலைக்க முடியும்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 60% முதல் 65% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியாகியுள்ள எல்லா முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகள் பெற்று தேசியப் பட்டியல் 18 ஆசனங்கள் உட்பட 159 ஆசனங்களையும்; ஐக்கிய மக்கள் சக்தி 2,968,716 வாக்குகள் பெற்று தேசியப் பட்டியல் 5 ஆசனங்கள் உட்பட 40 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 257;813 வாக்குகள் பெற்று தேசியப்பட்டியல் 1 ஆசனம் உட்பட 8 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 317,311 வாக்குகள் பெற்று தேசியப்பட்டியல் 2 ஆசனங்கள் உட்பட 5 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 243,354 வாக்குகள் பெற்று தேசியப்பட்டியல் 1 ஆசனம் உட்பட 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குகள் பெற்று 1 தேசியப்பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 66,234 வாக்குகள் பெற்று தேசியப்பட்டியல் ஆசனமில்லாமல் 1 ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளன.
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்படி,
தேசிய மக்கள் சக்தி சார்பில்
- புத்தளத்திலிருந்து முஹம்மத் பைஸல் (42,939),
- மாத்தறையிலிருந்து அர்கம் இல்யாஸ் (53,835),
- கம்பஹாவிலிருந்து முனீர் முளப்பர் (109,815)-
- (இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றம் நுழையும், நளீமிய்யாவில் கற்ற மெளலவி), கொழும்பிலிருந்து டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் (73018),
- குருநாகலையிலிருந்து M. அஸ்லம் (67,436),
- கண்டியிலிருந்து பஸ்மின் ஷெரீப் (57,716),
- ரியாஸ் பாரூக் (64,043)
ஏனைய கட்சிகள் சார்பாக
- திருகோண மலையிலிந்து இம்ரான் மஹ்ரூப் (22,779),
- வன்னியிலிருந்து காதர் மஸ்தான் (13,511)
- மட்டக்களப்பிலிருந்து M.L.A.M. ஹிஸ்புல்லா (32,410),
- கண்டியிலிருந்து ரவூப் ஹகீம் (30,883),
- வன்னியிலிருந்து ரிஷாத் பதியுதீன் (21,018),
- திகாமடுல்லையிலிருந்து M.S. உதுமாலெப்பே (13,016),M.M. தாஹிர் (14,511),
- கேகாலையிலிருந்து கபீர் ஹாஷிம் (36,034),
- கொழும்பிலிருந்து முஜீபுர் ரஹ்மான்(43737) மற்றும் S.M. மரைக்கார் (41482)
அம்பாந்தோட்டையில் ராஜபக்ஷ கட்சி படுதோல்வி!

ராஜபக்ஷாக்களின் கோட்டையாகக் கருதப்படும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியை சந்தித்துள்ளது!
டாக்டர். ஹரிணி அமரசூரிய 655,289. வாக்குகள் பெற்று மஹிந்தவின் சாதனையை முறியடித் துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ 2020 தேர்தலில் பெற்ற விருப்பு வாக்குகள் 527,364 ஆகும்.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 9 இடங்களைப் பெற்றுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரவூப் ஹகீமும், சமிந்தராணி கிரியல்லவும், சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கிய அனுராதா ஜயரத்னவும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் செல்வோர்:
தேசிய மக்கள் சக்தி – 09 seats:
K.D. லால்காந்த – 316,951 votes
ஜகத் மனுவர்ன – 128,678 votes
பிரசன்ன குணசேன – 94,242 votes
ஹன்சிகா விஜேமுனி – 82,926 votes
தனுரா திசாநாயக்க – 78,526 votes
E.M. பஸ்நாயக்க – 72,929 votes
ரியாஸ் பாரூக் – 64,043 votes
துஷாரி ஜயசிங்க – 58,223 votes
பஸ்மின் ஷெரீப் – 57,716 votes.
ஐக்கிய மக்கள் சக்தி – 02 seats:
ரவூப் ஹகீம் – 30,883 votes
ஷமின்தரனீ கிரியல்ல – 30,780 votes
புதிய ஜனநாயக முன்னணி : அனுராதா ஜயரத்ன – 20,749 votes.
மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி- 4 ; ஐக்கிய மக்கள் சக்தி 1 இடத்தைக் கைப்பற்றியது.
மலையகத்து தமிழர் கட்சிகள் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து வென்று வந்த நிலையில் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியில், மஞ்சுள சுரவீர ஆராச்சி (78832), மதுர செனவிரத்ன (52546),ஆர்.ஜீ.விஜயரத்ன (39006), அனுஷ்கா திலகரத்ன (34035), கிஷ்ணன் கலைச்செல்வி (33346) ஆகியாரும்; ஐக்கிய மக்கள் சக்தியில் பழனி திகாம்பரம் (48018), வேலுசாமி இராதாகிருஸ்ணன் (42273) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியில்
ஜீவன் தொண்டமான் (46438) வெற்றி பெற்றுள்ளார். இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 68% வாக்குகள்பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியிலும் ஈழத் தமிழர் கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர் கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.
தனித் தமிழீழமே தீர்வு என ஈழத் தமிழரின் தந்தை செல்வா தீர்மானம் நிறைவேற்றிய யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலும் ஈழத் தமிழர் கட்சி, தோல்வியைத் தழுவி இருக்கின்றது.
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 14,297 வாக்குகளையும் , தேசிய மக்கள் சக்தி 7,789 வாக்குகளையும் பெற்றுள்ளன.
கல்குடா தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஈழத் தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, மூதூர், திருகோணமலை ஆகிய தேர்தல் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 1 இடத்தையும், இலங்கை தமிழரசு கட்சி 1 இடத்தையும் பெற்றுள்ளன.
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 9,066 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1,612 வாக்குகளையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 1,124 வாக்குகளையும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1 ஆசனத்தையும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சனா தலைமையிலான சுயேற்சைக்குழு (17) 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 8,831 வாக்குகளையும், தமிழ் மக்கள் கூட்டணி 3,527 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 3,228 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2,396 வாக்குகளையும், சுயேட்சைக் குழு 2,279 வாக்குகளும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் - ஊர்க்காவற்றுறை தேர்தல் தொகுதியில் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது; அவரது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி 3296 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 2626 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 2116 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1000 வாக்குகளையும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி 4,467 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 4,022 வாக்குகளையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,625 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 1,980 வாக்குகளையும், சுயேட்சைக் குழு 1,572 வாக்குகளையும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 10,059 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி 4,386 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3,443 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2,751 வாக்குகளையும், சுயேட்சைக் குழு 2,413 வாக்குகளையும் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சி 23,293 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 8,717 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 8,554 வாக்குகளையும், சுயேட்சைக் குழு 2,098 வாக்குகளையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,497 வாக்குகளையும் பெற்றுள்ளன.
கல்முனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் திகாமடுள்ள - பொத்துவில் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து களமிறங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் 32410 விருப்பு வாக்குகள் பெற்றுள்ளார். வன்னி மாவட்டத்தில் SJB யின் கீழ் போட்டியிட்ட ACMC தலைவர் ரிஷாத் பதியுதீன் 21,018 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக - வசந்த பீரிஸ் (NPP), மஞ்சுள (NPP), விஜயரத்ன (NPP), றிஷாட் புகாரி (NPP), உதுமாலெப்பை (SLMC), தாஹிர் ( ACMC), கோடிஸ்வரன் (ITAK) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அனுர அலைக்கு மத்தியிலும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசங்களைப்பெற்று தேசியப்பட்டியல் 1 ஆசனத்துடன் (SLMC 1 SJB 1) என்ற அடிப்படையில் 4 ஆசனங்களைத் தக்கவைத்துள்ளமை பெரியதொரு சாதனையே!
எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி கூடவுள்ள புதிய நாடாளுமன்றம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments