வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் திறன்மிகுப் பணியாளர்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 200,000 விசாக்களை வழங்கவுள்ளதாக ஜேர்மனி(Germany) அரசு அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்போது சுமார் 1.34 மில்லியன் பணியிடங்கள் ஜேர்மனியில் வெற்றிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்மிகுப் பணியாளர்களுக்காக 200,000 விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து வரும் மக்கள், ஜேர்மனிக்குள் நுழையும் முன் தங்கள் கல்வித்தகுதி அங்கீரிக்கப்படவேண்டும் என்னும் விதியும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜேர்மனியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், 89 சதவிகிதமும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments