Ticker

6/recent/ticker-posts

Ad Code



நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஆண்மைக்குறைவுக்குக் காரணமாக அமையலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதவிகித ஆண்களுக்கு ஆண்மை குறைவு காணப்படுகிறது. 
 
அதேபோல, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், அதற்கான மாத்திரைகளை உட்கொள்பவர்களும், வலிப்பு மற்றும் மனநல பிரச்சனைகளுக்கான மருந்துகளை பயன்படுத்துபவர்களும் ஆண்மையில் குறைபாட்டைப் பெறலாம். 
 
தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கூட ஆண்மையில் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம். 
 
ஒரு மனிதன் ஒரு நாளில் உபயோகிக்கும் பொருட்களில், ஆயிரக்கணக்கான ரசாயனங்களை உட்கொள்கிறான். இதிலுள்ள சில ரசாயனங்கள் ஆண்மைக்குறைவுக்கு காரணமாக மாறலாம்.
 
ஆணின் ஹார்மோன்கள் சரியாக சுரக்காவிட்டால், அந்த ஆணுக்கு பாலியல் ஆர்வம், விறைப்புத்தன்மை, விந்து வெளியேற்றம் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

0 Comments