ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 11ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் போராடி 144-6 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கரீம் ஜானத் 54* (49), அனுபவ வீரர் முகமது நபி 44 (27) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஜிம்பாப்பே அணிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்கரவா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 145 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி 9, கேப்டன் சிக்கந்தர் ராசா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இருப்பினும் துவக்க வீரர் பிரையன் பெனட் நிதானமாக விளையாடி 49 (49) ரன்கள் எடுத்த போது ரஷித் கானிடம் சிக்கினார். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய டியோன் மேயர்ஸ் 32 (29) ரன்கள் எடுத்த போது முகமது நபி சுழலில் ஃபெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் ரியான் புர்ல் 10, வேஸ்லே மாதேவேர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இருப்பினும் கடைசி ஓவர்களில் வெலிங்டன் மசகட்ஸா 6* (2), முசிக்வா 16* (13) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக அசமதுல்லா வீசிய கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது முசிக்வா சிங்கிள் எடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 4 வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்பே 1 – 0* (3) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் 2023 விளையாடிய 6 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியிடம் ஜிம்பாப்வே தொடர்ந்து தோற்றது.
அதை ஒருவழியாக தற்போது ஜிம்பாப்வே நிறுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் 2, நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments