Ticker

6/recent/ticker-posts

Ad Code



கையை பிடித்து இழுத்த போலீஸ்காரர் கன்னத்தில் 'பளார்' விட்ட பெண்... என்ன நடந்தது?


கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கைது செய்ததால், ஆத்திரமடைந்த பெண் ஒருவர், போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆஷா எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆர்வலர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த நிலையிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆஷா ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, ஐதராபாத்தில் உள்ள கோட்டி சௌரஸ்தாவில் ஆஷா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள் போராடிய நிலையில், அங்கு பாதுகாப்புக்கு அதிகளவில் ஆண் காவலர்களே குவிந்திருந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சி செய்தனர்.

பெண்கள் அரணாக நின்று ஒவருவரையொருவர் பாதுகாத்தனர். இருந்தபோதும் போலீசார் கையைப் பிடித்து இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் சரக்கு லாரியில் ஏற்றினர். சந்தைக்கு ஆடுகளை அள்ளிப் போட்டுச் செல்வது போன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை லாரியில் அடைத்தனர். அப்போது, பெண் ஒருவர், ஆண் காவலர்கள் தனது கையை பிடித்து இழுத்ததாக கூறி, அவரின் கன்னத்தில் அறைந்தார். அதை சற்றும் எதிர்பாராத போலீஸ்காரர் அலட்டிக் கொள்ளாத நிலையில், சக காவலர்கள் அந்த பெண்ணை அடிக்க பாய்ந்தனர்.

அத்துடன், ஒருசில காலர்கள் தாவிக் குதித்து அவரை இழுத்துப் போட்டு அடித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி ஆஷா ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் போலீசார் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments