Ticker

6/recent/ticker-posts

Ad Code



கிளர்ச்சிக்குழுவினருக்கு ஒத்துழைக்கும் பிரதமர்


நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, கிளர்ச்சிக் குழுவினருக்கு சிரியா பிரதமர் முகமது காஜி ஜலாலி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். 

இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

மேலும் அரசு படைகள் வெளியேறிய பகுதிகளில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை கைப்பற்றியுள்ளது.

ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். 

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயற்பட்டு வருவதாகவும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், பிரதமர் முகமது காஜி ஜலாலி கூறியுள்ளார்.

மேலும், "அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயற்படுகிறது. கிளர்ச்சிக் குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்படும் அஹ்மத் அல்-ஷாராவை சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

tamilmirror



 Ai SONGS

 



Post a Comment

0 Comments