
காதலர்கள் காட்டு வழிப்பாதையில் வந்து கொண்டிருந்த போது சலனமின்றி நகர்ந்து கொண்டிருந்த ஓடை ஒன்றைக் கண்டார்கள்.
சலனமின்றி நகர்ந்து கொண்டிருந்த ஓடைக்குள் ஆங்காங்கே இருந்த பென்னம் பெரிய கருங்கற்களை உராய்ந்து சென்று கொண்டிருந்த தெளிந்த நீர், மெல்லிய சலசலப்பை ஏற்படுத்திச் சென்றது!
இருவரும் போய் அந்தக் கற்களில் ஒன்றின்மேல் அமர்ந்து, ஒருவர் முகத்தை ஒருவர் வெறிக்கப் பார்த்துக் கொண்டனர்.
செரோக்கியின் கண்கள் அவளது முகத்தை விட்டும் அகன்று கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடம்பில் படர்ந்தபோது அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது! தனது கரங்களால் முழு உடம்பையும் மூடிக்கொள்ள முற்பட்டாள்! அவளது கைகளை அகற்றிவிட்டு அவளது உடம்பில் சாய்ந்தான் செரோக்கி!ரெங்க்மாவின் இரு கைகளும் அவளையறியாமலேயே அவனை வாரிக்கொண்டன! தன்னிலை மறந்தவளாக அவள் கல்மீது சாய்ந்தாள்!
பதிலுக்கு செரோக்கியும் சாய்ந்தவாறு முகத்துக்கு முகம் பார்த்து ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தனர்.
முதன் முதலாக இரு சக்கர வண்டியில் ரெங்க்மாவை ஏற்றிக் கொண்டு நகருக்குள் பயணிக்கப்போகும் சந்தோசத்தின் நினைப்பு செரோக்கியைப் பாடாய்ப்படுத்தியது!
அப்பொழுது எங்கிருந்தோ வந்த "கூலான்" பழத்தின் வாசனை அவனது மூக்கைத் துளைத்தது; எங்கோ பலாக்காய் பழுத்திருப்பத்தை அவன் உணர்ந்தான்!
அவனது கண்கள் பலாமரத்தைத் தேடின. கண்டு கொண்டவன்; எழுந்து கொண்டான்!
ரெங்க்மாவைக் கல்லின்மேல் இருக்க வைத்துவிட்டு மரத்தடி நோக்கிச் சென்றான்.மூலிகையையும் எச்சங்களையும் தேடியலைந்து வனாந்திரம் பரிச்சய மானதுபோல, ரெங்க்மாவுக்கு அணிகலன் செய்வதற்காக மான்கொம்பு தேடியலைந்ததில் அலவத்தையும், அம்புளுவாவையும் அவனுக்குப் அத்துப்படியாகி விட்டன!
மரத்தடிக்கு வந்தவன், இரண்டு கைகளாலும் மரத்தைப் பிடித்து, எக்கி ஏறி விர்ரென்று மரத்தின் அரைவாசிக்கு மேல் வந்தவனுக்கு, “வீல்” என்ற கூக்குரல் கேட்டதும், ரெங்க்மா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அவனது கண்கள் சென்றன!
அங்கு அவன் கண்ட காட்சி... ரெங்க்மாவை ஒரு முரடன்
இழுத்துக் கொண்டிருப்பதையும், அவனிடமிருந்து விடுபட அவள் போராடிக் கொண்டிருப்பதையும் கண்டவன், சர்ரென மரத்திலிருந்து இறங்கினான்.
செரோக்கி நீரோடைக்கு வருவதற்குள் முரடன் ரெங்க்மாவை இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டி ருந்தான்! செரோக்கியும் வேகமாக அவர்களைத் துரத்தியோடினான்.
அவர்களை நெருங்குமுன் முரடனின் முகம் அவன் கண்களில் பட்டது. ரெங்மாவை இழுத்துக் கொண்டு ஓடியவன் வேறு யாருமல்ல!
ரங்குதான்! ரெங்க்மா எவ்வளவு போராடியும் அவன் விடவில்லை!
காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருந்த ரெங்க்மாவின் தந்தை தூரத்தில் ஒரு முரடன் பெண்பிள்ளை ஒன்றை இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருப்பதையும், அவள் அவனிடமிருந்து விடுபடப்போராடிக் கொண்டிருப்பதையும் கண்டார்!
வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்த அவர், அது ரங்குவும் தன் மகள் ரெங்க்மாவும் என்பதைக் கண்டுகொண்டார்!
அவர் ஒரு மரத்துக்கு மறைந்து ஒதுங்கியவராகத் துரிதமாகச் செயல்பட்டார்!
தனது வில்லில் முனைப்பகுதி தட்டையான ”கியூரி”
தடவாத அம்பொன்றைச் சொருகி, முரடனின் கணுக்காலுக்குக் குறிபார்த்து ஏவினார்.
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments