
350. வினா : துன்பம் கண்டு செய்ய வேண்டியது எது?
விடை: சிரிப்பது
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.(621)
351. வினா : துன்பத்திற்குத் துன்பம் செய்பவர் யார்?
விடை : துன்பத்தைக் கண்டு துன்புறாதவர்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.(623)
352. வினா : யாருக்கு வந்த துன்பம் துன்பப்படும்?
00 விடை : மனம் கலங்காதவனின் துன்பம்
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.(625)
353. வினா : யார் துன்பம் உறுதல் இல்லை?
DAS விடை : துன்பம் இயல்பானது என நினைப்பவர்
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.(628)
354. வினா : பகைவரும் விரும்பும் சிறப்புடையவன் யார்?
விடை: துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கொள்பவன்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.(630)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments