
குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
பாட்டி!
நாம சாப்பிடுவதைக் காட்டிலும்
சாப்பிட்ட உணவு
செரிக்கிறது மகிழ்ச்சி!
அதுபோல என் உயிர்த்தோழி
பாலாவோட
நட்பா அன்பா இருக்குறதுக்கு
முன்னாடி
அவள கோபப்படுத்தி
உம்முனு இருக்குற
அவமுகக் குறிப்பைப்
பாக்குறது மகிழ்ச்சிதான்
பாட்டி!
என்ன சொல்றீங்க?
ஏண்டி அவநாலாவது படிக்கிற
சின்னபொண்ணு!
நீயோ ஆறாவது படிக்கிற!
தேவையாஉனக்கு?
குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார்
அதுமன்னும் கூடலிற் காணப் படும்.
அம்மா!
நான் லதாவோட
ரொம்பநாள் பேசல!
பரவாயில்லனு நானே
வலியபோயி சமாதானப்படுத்தி
பேசிட்டேம்மா!
இப்பதா மனசு லேசாஇருக்கு!
இந்தமாதிரி பொய்ச்சண்டையில
தோத்தவங்கதாம்மா
வெற்றிபெற்றவங்க! தெரியுமா!
அந்த உண்மையெல்லாம்
ஒன்றாக சேந்து
பேசும்போது மனசுக்கு
மகிழ்ச்சியா இருக்கும்!
அப்போது தெரியும்மா!
இதெல்லாம் உனக்குஎங்க
தெரியப்போகுது?
எனக்கு இதுவும் வேணும்!
இன்னமும் வேணுண்டி!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments