Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-60


ராஜகுமாரி சென்று தன் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் தன்னோட மனம் சற்று முன் கேட்ட அந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப நினைவில் கொண்டு வந்து தொல்லை கொடுத்த படியே இருக்க செய்வது அறியாது தன் கணவர் சிலை முன்பாகப் போய் நின்று சற்று நேரம் ஆள் மனதோடு உரையாடினார்.

பின்னர் அமைதியான மன நிலையில் மாறியதும் தலை சாய்த்துக் கொண்டார் அருமையான மெல்லிசைக் கீதம் ஒலிக்க விட்டு.

அதே நேரம் குமரன் ராஜகுமாரி இருக்கும் இடத்திற்கு வந்து விட்டான். மருத்துவரைப் பார்த்த பணிப் பெண்கள் வணக்கம் கூறி விட்டு வழி விட்டார்கள்.  

உள்ளே நுழைந்து ராஜகுமாரியைப் பார்வையிட்ட மருத்துவர் குமரன் பணிப்பெண் மீனாவை அழைத்துக் கேட்டான்.

"இரவு ஏதேனும் பேசினாரா இல்லை அழுதாரா என்ன செய்தார்" என்று .

சற்று நேரம் சிந்தித்தவளாய் நின்ற மீனா "ஏதும் பேசவில்லை கொஞ்சம் அழுவது போல் பாவனை செய்தார் பின்னர் கண்ணைத் திறந்தார். உடனே மூடி விட்டார். வேறு எவ்விதமான பிரச்சனையும் கொடுக்க வில்லை" என்றாள் .

"ஓ அப்படியா நல்லது நன்றி நீங்கள் சென்று ஓய்வு எடுங்கள் உதவிக்குப் பணியாளர்கள் வேண்டும் அதற்கு  ஏற்பாடு செய்து விடுங்கள் .நீங்க போனதும் அவர்களை உடனே இங்கு அனுப்பி வையுங்கள்" என்றான் மருத்துவன் குமரன். 

"சரி" எனக் கூறி பணிப்பெண் இருவரும் காவலர்கள் இருவரும் புறப்பட்டனர்.

அவர்கள் போகும் போதே எதிரே புதிய காவலர்கள் வந்தார்கள்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments