Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-168


குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

ஒருத்தன் எல்லாத்தையும் தொலைச்சிட்டு ஒண்ணுமே இல்லாம நின்னாலும், அவனை விட்டுக் குடுக்காம பழைய ஒறவை நெனைச்சு தூக்கி வச்சு பேசுதொவொ தான் சுற்றத்தாருங்க.

குறள் 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

அடுத்தவொளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறதும், இனிக்க இனிக்க பேசுறதுமா இருக்க ஒருத்தனைச் சுத்தி எப்பமும் சொந்த பந்தம்  இருக்கும். 

குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

அரசாள்றவன் தன்னைச் சுத்தி இருக்க எல்லாரையும் சமமா நெனைய்க்காம, அவங்க அவங்க திறமைக்கே ஏத்தவாறு பயன்படுத்திக்கிட்டா, எல்லாருமே அவனுக்கு ஆதரவா இருப்பாங்க. 

குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

ஒரு கட்சியில ஒண்ணா சேர்ந்து இருந்து, தலைவனோட நடவடிக்கைகள் பிடிக்காம பிரிஞ்சு போன பொறவு, தலைவனோட நடவடிக்கைகள்ல  மாத்தம் வந்தா மீண்டும் வந்து சேர்ந்துக்கிடுவாங்க. 

குறள் 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

என்னல்லாமோ குத்தங் கொறை கூறி கட்சியை விட்டு பிரிஞ்சு போன ஒருத்தன் எதாவது ஒரு காரணத்துக்காக மீண்டும் சேரதுக்கு திரும்பி வந்தாம்னா, தலைவன் நல்ல ஆராய்ஞ்சு பாத்து அவனை சேத்துக்கிடலாம். 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments