Ticker

6/recent/ticker-posts

சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமனம்


சிரியா நாட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முஹம்மத் அல்- பஷீர் அடுத்தாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்று தொலைக்காட்சி நேரலையில் அவர் தெரிவித்தார் 

இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்க காப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் இடையே கூட்டம் நடைபெற்றதாகவும் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். 

சிரியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவருக்குப் போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

24 ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சியில் இருந்த சிரியா கிளர்ச்சியாளர்களின் புரட்சியால் அல்- அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 

தற்போது சிரியாவில் இயல்பு நிலை வழக்கத்திற்குத் திரும்பி வருகிறது

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments