Ticker

6/recent/ticker-posts

Ad Code



"கல்வி ஒன்றே அழியாத சொத்து" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !


சென்னை சேத்துப்பட்டு கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வருடாந்திர முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"இந்நிகழ்வின் கலந்துகொள்ள மகிழ்ச்சி அடைகிறேன்.நள்ளிரவு தான் மழை பெய்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு முடித்து வந்தேன். பிள்ளைகள் படித்த பள்ளிக்கு பெற்றோர்களை அழைப்பது தான் வழக்கம் .ஆனால் என் தந்தை படித்த பள்ளிக்கு என்னை அழைத்து உள்ளீர்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சரை உருவாக்கிய பள்ளி இது.

இது எனக்கு ரத்த சம்பந்தம் உடைய பள்ளி மட்டுமல்ல, கொள்கை ரீதியாக இருப்பவர்களும் இந்த பள்ளியில் படித்திருக்கிறார்கள். இதனால் இங்கு நுழைவது சட்டமன்றத்தில் நுழைந்து போல இருந்தது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் இந்த பள்ளியில் படித்தவர்கள்தான்.

இந்த பள்ளி இன்னும் பத்து ஆண்டுகளில் 200 வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. சென்னையில் உள்ள மாணவர்களின் படிக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கிய பள்ளி இது. நீதிக்கட்சி இவ்வாறு சமூக சீர்திருத்தத்திற்கு அடித்தளமாக அமைந்ததோ, அதேபோல மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பள்ளி கல்வியின் சிறப்பை உணர்த்தி உள்ளது.

படித்தால் தீட்டு என்று கூறி வந்த காலத்தில், படிக்காவிட்டால்தான் தீட்டு என்று படிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டுவந்த கிறிஸ்தவ கொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது. கல்வி ஒன்றே அழியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்" என்று கூறினார்.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments