Ticker

6/recent/ticker-posts

Ad Code



வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் விற்பனை - முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!


பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில் தங்கியுள்ள வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரவளை நகரிலுள்ள இந்த வாடகை வீட்டில், பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், சந்தேக நபர் ஹெரோயினை சிறிய பக்கட்களில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அதன் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 வெளிநாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

adaderana



 Ai SONGS

 



Post a Comment

0 Comments