கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது. இது எத்தனை ஆண்டுகள் பழமையான கோவில் என்பதைப் பார்ப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை கோவில்கள் அனைத்தும் கலைநயத்திலும், நுட்பத்திலும் சிறப்புமிக்கதாகவே இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் கலையிலும் கட்டடக்கலையிலும் சிறப்புமிக்க கோவில்களை நிறைய பார்க்க முடியும். பல விசித்திரமான கோவில்களைக்கூட இங்குப் பார்க்கலாம்.
அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துக்கச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்றாலும், இன்றும் கம்பீரமாக நிற்கிறது. ராஜ ராஜ சோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் சோழ வம்சத்தின் திறனை வெளிப்படுத்தும் நுட்பமான கல்வெட்டுகள் மற்றும் கலை கட்டமைப்புகள் உள்ளன.
கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தக் கோவிலில் பல சேதங்கள் ஏற்பட்டன. இதனால், 5 கோடி செலவில் மீண்டும் மறுசீரமைப்பு பணிகள் நடைப்பெற்றது. இந்த மறு சீரமைப்பில் நவீன பாதுகாப்பு முறைகளுடன் பாரம்பரிய நுட்பங்களும் கலந்துள்ளன. மேலும் சில இடங்களை கட்டமைத்தும் மற்ற இடங்களை அழகாகவும் மாற்றி புதிதாக்கியுள்ளனர்.
இந்த கோவிலை பழமை மாறாமல் அழகாக புதுப்பித்ததற்கு யுனெஸ்கோவின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 3, 2023ம் ஆண்டு நடைபெற்றது.
தமிழக அரசு 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்களை புதுபிக்க சுமார் 300 கோடியை ஒதுக்கியது. அதில் ஒரு கோவிலாகதான் இந்தக் கோவிலும் புதுபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க ஆசிய-பசிபிக் விருது வழங்கப்பட்டது.
இந்த கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. விக்ரம சோழன் தனக்கு ஏற்பட்ட நோய் தீர பல கோவில்களுக்கும் சென்று வழிபட்ட நிலையில், அவரது கனவில் தோன்றிய ஆபத்சகாயேஸ்வரர் இந்த தலத்திற்கு வந்து 48 நாட்கள் வழிபட சொன்னார். அதன்படியே செய்த மன்னனுக்கு நோய் நீங்கியதாக சொல்லப்படுகிறது. இத்தனை வரலாற்று சிறப்புமிக்க கோவிலான இக்கோவிலை மறு சீரமைக்க கூறி மக்கள் நீண்ட நாட்கள் கேட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
kalkionline
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments