Ticker

6/recent/ticker-posts

மாமன் பொண்ணே!


அச்சு வெல்லம் தாறேன் 
அஞ்சுதமே பாரேன் 
அந்தி சாயும் நேரம்
அங்கே கொஞ்சம் வாயேன்.

மாமன் பொண்ணே 
மடி சாயட்டுமா ?
காமத்துக்கு விடை தேடட்டுமா?
அடி மாமன் பொண்ணே 
மடி சாயட்டுமா?

அத்தி மரமாகேன் 
தங்கும் கிளியாய் வாறேன். 
இத்தி இலையாகேன் 
கொத்தித் தின்ன வாறேன்.

மாமன் பொண்ணே
மடி சாயட்டுமா 
காதலுடன் நானும் 
ஜோடி போடட்டுமா.
அடி மாமன் பொண்ணே
 மடி சாயட்டுமா.?

வீச்சருவாள் மீச 
முறுக்கி விட ஆச
தோணலையோ லேச
இன்னும் என்ன பேச 

மாமன் பொண்ணே 
மடி சாயட்டுமா?
சாமந்திக்கு விலை பேசட்டுமா 
அடி மாமன் பொண்ணே
மடி சாயட்டுமா? 

ஆர் .எஸ் . கலா

 



Post a Comment

0 Comments