பொதுவாக நீதிபதிகள் அரசியல், மதம் உள்ளிட்டவை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது. ஆனால் அதையும் மீறி தற்போது பாஜக ஆட்சியில் உள்ள ஒரு சில நீதிபதிகள் இதுபோன்றவைகளில் கலந்துகொள்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த சூழலில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து, அதுவும் இந்துத்துவ அமைப்பு நிகழ்வில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்துத்துவ அமைப்பை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷேகர் குமார் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்வில் பேசிய அவர், “நம்முடைய குழந்தைகள் சிறு வயதிலேயே வேதங்கள் படித்து, ஸ்லோகங்கள் சொல்லி அகிம்சை முறையில் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள், கசாப்புக் கடைகளில் விலங்குகள் வெட்டப்படுவதை பார்த்து வளருகின்றனர். அவர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பார்களேன நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?.
இது இந்துஸ்தான். இங்கு வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். பசு, கீதை மற்றும் கங்கை ஆகியவை கலாச்சாரத்தை வரையறுக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஹர்பலா தேவியின் சிலை உள்ளது, ஒவ்வொரு குழந்தையும் ராமர் - அதுதான் எனது நாடு. நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், ஒரு தொழிலதிபராக இருந்தாலும் அல்லது ஒரு மாணவராக இருந்தாலும் சரி, இந்து என்ற உங்கள் அடையாளம் முதலில் வருகிறது.
இந்த மண்ணை தன் தாயையும், தன்னையும் அதன் குழந்தையாகக் கருதும் எவரும் இந்துக்களே. இந்த நாட்டை உலகத் தலைவராக மாற்றும் ஆற்றல் ஒரு இந்துவுக்கு மட்டுமே உண்டு என்றும், வேறு யாராலும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் விவேகானந்தர் நம்பினார். இந்த அபிலாஷையை ஒருபோதும் மங்க விடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.
ஒரு நீதிபதியின் இந்த கொடூர பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நீதிபதி ஷேகர் குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சுக்கள் ஒரு தீய, கொடூரமான மற்றும் விஷத்தன்மை கொண்டவையாக உள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் அடிப்படைக் கட்டமைப்பான மதச்சார்பின்மைக்கு எதிராக அவர் பேசியுள்ளார். இது நீதித்துறையின் சுதந்திரத்தை உள்ளே இருந்துகொண்டே நாசப்படுத்துவதற்கு சமம். எனவே அவர் மீது நடவ்டிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் இந்த முறையற்ற வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுக்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments