அப்காசியவிற்கு நிதி உதவியை ரஷ்யா நிறுத்திவிட்டதால், எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்காசியா
ரஷ்யா, வெனிசுலா, நிகரகுவா, சிரியா, நவுரு ஆகிய நாடுகளாக சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்ட பிரேதேசம் அப்காசியா (Abkhazia).
ஆனாலும், ஜார்ஜியா மற்றும் கிட்டத்தட்ட அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளும் அப்காசியாவை ஜார்ஜியாவில் இறையாண்மை பிரதேசமாக கருதுகின்றன.
அப்காசியாவின் தலைவர் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய ரஷ்யாவின் முதலீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
நிதி உதவியை நிறுத்திய ரஷ்யா
அதன் பின்னர் அப்காசியாவிற்கான நிதி உதவியை ரஷ்யா நிறுத்தியது. கடந்த வாரம் அப்காசியாவின் அதிகாரிகள் இதனை அறிவித்தனர்.
இதன் காரணமாக அங்கு மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மின் தடைகளை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பாடசாலைகளை இடைநிறுத்தியுள்ள அதிகாரிகள், மின்சாரத்தை சேமிக்க இணைய அணுகலை துண்டித்தனர்.
தற்போதைய தலைவர் Badra Gunba, "ரஷ்யாவின் நிதி உதவி இல்லாமல் நிலைமையைக் கட்டுப்படுத்துவது எங்களுக்கு மிகவும் கடினம்" என தெரிவித்தார்.
எரிசக்தி விநியோகம்
இந்நிலையில், ரஷ்ய எரிசக்தி விநியோகம் மற்றும் அதன் சொந்த நீர்மின் நிலையத்தை நம்பியிருக்கும் அப்காசியா, திங்கட்கிழமை முதல் தினசரி 10 மணிநேர மின்வெட்டை அறிமுகப்படுத்தியது.
இதனால் அப்காசியாவில் காலை மற்றும் மதியம் 4 மணிநேரம் 40 நிமிடங்கள் வரை மின்சாரம் கிடைக்கும் என்றும், அட்டவணையின்படி இரவு 9 மணி மற்றும் காலை 7மணி என தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில், அப்காசியாவின் ஆற்றல் பாதுகாப்பு மறுமொழி மையம் எரிசக்தி அவசரநிலையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
lankasri
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments