Ticker

6/recent/ticker-posts

Ad Code



விசா விடயத்தில் இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்


ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுவந்துள்ள நடைமுறையால் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய சுற்றுலாப்பயணி

இந்தியர்களில் பலர் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவை தவிர அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கும் விசா எளிதில் கிடைத்தது. அதாவது, விண்ணப்பிக்கப்படும் 100 விசாக்களில் 99 விசாக்கள் ஏற்கப்பட்டுவிடும். 

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் விசா தொடர்பில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

புதிய விதிகள்

அமீரகத்தின் புதிய விதிகளின்படி, சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கப் போகும் ஹொட்டல் முன்பதிவு விவரங்கள், விமான டிக்கெட் மற்றும் திரும்புதலுக்கான டிக்கெட் ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

உறவினர்கள் வீடுகளில் தங்குவதற்கு திட்டமிடுபவர்கள், அதற்கான ஆவணங்களை பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் துபாயில் தங்கியிருக்க தேவையான அளவு பணம் வங்கிக்கணக்கில் போதுமானதாக இருப்பதையும் காட்ட வேண்டும்.

குறிப்பாக, கடைசி 3 மாத வங்கி இருப்புநிலைத்தகவலை (Bank Statement) காட்டுவதுடன், குறைந்தது தங்கள் கணக்கில் 50,000 ரூபாய் Minimum balance வைத்திருக்க வேண்டும் மற்றும் ஹொட்டலில் தங்குபவர்கள் பான் கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம். 

lankasri



 Ai SONGS

 



Post a Comment

0 Comments