Ticker

6/recent/ticker-posts

Ad Code



அரிசி விற்பனை - நுவரெலியாவிலும் சிக்கிய வர்த்தகர்கள்


நுவரெலியா மாவட்டத்தில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களை கைது செய்வதற்காக குறித்த அதிகாரிகள் இன்று (11) சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என தலைவர் அமில ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

adaderana



 Ai SONGS

 



Post a Comment

0 Comments