Ticker

6/recent/ticker-posts

Ad Code



நிலம்!


மூடியை திறந்து பார்த்த போது
பானை எனது பிம்பத்தை 
விழுங்கி இருந்தது

கைத்தவறி விழுந்து 
உடைந்த பானை தான் 
கோடைகாலத்தில்  
தண்ணீர்பந்தல் 
வைக்க உதவியிருக்கிறது...

உடைந்த துண்டுகள்
ஒவ்வொன்றிலும் முழு நிலவை ...
கையருகே காட்டியிருக்கிறது.

பானை உருபெற
மிதிவாங்கிய 
அதே மண் தான் 
ஆறடி குழிக்குள்
எனக்காக காத்திருக்கிறது

சாயிராம். 
தஞ்சாவூர்.




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments