Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிராஜ் என்கிட்ட வந்து இதை இனிப்பா சொன்னாரு.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. டிராவிஸ் ஹெட் பேட்டி


அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியைப் பறித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

அவரை அவுட்டாக்கிய முகமது சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபத்துடன் வெளியேற்றினார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். இறுதியில் அடிலெய்ட் ரசிகர்கள் தங்கள் சொந்த ஊர் வீரரை அப்படி அனுப்பியதற்காக சிராஜுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பின்னர் நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள் என்று சொன்னதற்காக சிராஜ் அப்படி தவறாக புரிந்து கொண்டு நடந்தது ஏமாற்றத்தை கொடுத்ததாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் டிராவிஸ் ஹெட் சொன்னது பொய் என்று தெரிவித்த சிராஜ் அவர் சில மோசமான வார்த்தைகளை தம்மிடம் பேசியதாலேயே அப்படி நடந்து கொண்டதாக கூறியிருந்தார். அந்த நிலையில் அப்போட்டியின் மூன்றாவது நாளில் சிராஜ் இந்தியாவுக்காக பேட்டிங் செய்ய வந்தார்.

மறுபுறம் டிராவிஸ் ஹெட் அவருடைய அருகிலேயே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட பின் அவரிடம் சென்ற சிராஜ் நட்பாக சில வார்த்தைகளை பேசினார். இறுதியில் போட்டியின் முடிவிலும் அந்த இருவரும் கை கொடுத்து புன்னகையான முகத்துடன் ஜென்டில்மேன்களாக நடந்து கொண்டார்கள். இந்நிலையில் தம்மை அவுட்டாக்கிய போது தவறான புரிதலால் அப்படி நடந்து கொண்டதாக சிராஜ் தெரிவித்ததாக டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

இது பற்றி ஏபிசி ஸ்போர்ட் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னிடம் வந்த சிராஜ் அது கொஞ்சம் தவறான புரிதலால் ஏற்பட்டது என்று சொன்னார். அது இனிப்பாக இருந்தது. நாங்கள் அங்கிருந்து நகர வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போட்டியில் வென்றதால் எங்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே அதைப் பற்றி மேற்கொண்டு பேசி மகிழ்ச்சியை பாழ்படுத்த விரும்பாதீர்கள்”

“அவர் என்னிடம் ஏன் முறைத்தீர்கள்? என்ற வகையில் சொன்னார். அதற்கு பாருங்கள் நான் முதலில் முறைக்கவில்லை ஆனால் இரண்டாவது முறையாக முறைத்தேன் என்று அவரிடம் சொன்னேன். அந்த வகையில் தவறான புரிதலால் நடந்த விஷயங்களுக்காக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் இனிப்புடன் நகர்கிறோம்” என்று கூறினார். இதிலிருந்து தங்களுக்குள் நடந்த மோதல் மைதானத்துடன் முடிந்து விட்டதாக ஹெட் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments