மதரஸா நிர்வாகிகளின் கவனக்குறைவால் மதரஸாக்களில் ஏற்படும் விபரீதங்கள் காலத்துக்கு காலம் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் பேருவளை பாஸியா மதரஸாவில் படிக்கும் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 11 வயது மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த மதரஸாவில் படிக்கும் ஒரு மாணவர் கழிவறைக்குச் சென்ற போது அது நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாத அசுத்தம் காரணமாக குறிப்பிட்ட மாணவன் வழுக்கி விழுந்துள்ளார். இதன் போது இவரது காலின் நரம்பு வெட்டிப்பட்ட நிலையி்ல் களுத்துறை நாகொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இம்மாணவன் கடும் இரத்தப்போக்கில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதைவிட பரிதாபமான ஒரு விடயம் இம்மாணவர் நிர்வாகத்தின் கவனையீனத்தின் காரணமாக பெரும் ஆபத்தில் இருந்து உயிர் தப்பிய நிலையில், நான்கு நாட்களாகியும் இது சம்பந்தமா பாதிக்கப்பட்ட மதரஸா மாணவனின் நலனில் மதரஸா நிர்வாகம் எந்தவிதமான கவனமும் செலுத்தவுமில்லை, அக்கறை கொள்ளவும் இல்லை, குறைந்தபட்சம் மாணவனின் உடல் நலம் சம்பந்தமாக எந்தவிதமான விசாரணைகளும் இல்லை என மாணவனின் உறவினர் ஒருவர் மனவேதனையுடன் தெரிவித்தார்.
இவ்வாறு நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுவதற்கு வறுமை செய்த குற்றம் தானா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாக மதரஸாக்களில், பாடசாலைகளில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவது இயற்கையே. ஆனால் அது விடயங்களில் நிவாகம் கவணம் செலுத்த வேண்டும்.
இதே நிலை ஒரு வசதியான குடும்பத்தின் ஒரு பிள்ளைக்கு ஏற்பட்டிடுருந்தால் ஆயிரம் கார்கள் அந்த வீட்டின் முன் நின்றிருக்கும் என்பதே உண்மை.
ஒவ்வொரு பெற்றோருக்கும் அவரவர் பிள்ளைகள் பெரும் சொத்துக்களே. இது பணத்தால், செல்வத்தால் வேறுபடுவதில்லை.
பொதுவாக சில மதரஸாக்களினால் பாதிக்கப்படுவது வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே. எனவே ஒழுங்கான பொறுப்புணர்ச்சியுடன் இவை நடாத்தப்பட வேண்டும். இதன் பொறுப்புக்களை சரியாக செய்ய முடியாதவர்கள் போட்டிக்கும் பதவிக்கும் இவ்வாறான இடங்களில் பொறுப்பாளர்களா பதவி வகிக்காமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
காலின் நரம்பில் ஏற்படும் காயம் எந்தளவு பாரதுரமானது என்பது சொல்லித்தெரிய வேண்டிதில்லை. இவ்வாரான காயங்களால் வாழ் நாள் முழுதும் ஒழுங்காக நடக்க முடியாமல் வேதனை படுபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வின் மார்கத்தை படிக்கச் சென்ற இந்தப் பிஞ்சு உள்ளத்தை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இந்த விடயத்தில் பொறுப்பாளர்கள் எந்த காரணமும் கூற முடியாது இந்த பிள்ளையின் நலனில் இவர்களே பொறுப்பு கூறவேண்டும்.
நாவில் பலமும் மடியில் கனமும் இருந்தால் உலகில் தப்பிக்கலாம் ஆனால் அல்லாஹ்விடத்தில் அத்தனை பொறுப்புக்களுக்கும் பதில் சொல்லத்தான் வேண்டும்.
நாட்டில் இவ்வாறாக கவனயீனமாக இயங்கும் மதரஸாக்கள் சம்பந்தமாக மதரஸாக்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments