Ticker

6/recent/ticker-posts

Ad Code



இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!


மனிதர்களாகிய நமக்கு முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் இளம் தலைமுறையினரிடையே தற்போது நரைமுடி காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட கேர் கலர்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பின்விளைவுகள் ஏற்படலாம், உங்கள் முடியின் நிறத்தை இயற்கையாகவே மீட்டெடுக்க சில உணவுகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கீரை: இந்த பட்டியலில் முதலில் இருப்பது இரும்பு சத்து நிறைந்த கீரை. இவை முடி வளர்வதற்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்கிறது, இது முடியின் நிறத்தை பராமரிக்கவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.

வால்நட்: இது  உடலுக்கு எவ்வளவு சத்துகளை வழங்குகிறதோ அதே அளவிற்கு முடிக்கும்  வழங்குகிறது. முடி திசுக்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

ஆம்லா: நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் ஆம்லாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடி நிறமியை அதிகரிப்பதன் மூலம்  நரைப்பதைத் தடுக்கிறது.

எள் விதைகள்: இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் ஏராளம் எள் விதைகளில் உள்ளன. இது மெலனின் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன, முடியின் நிறத்தை பராமரிக்க பங்களிக்கின்றன.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளன. இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து நரைப்பதை தடுக்கிறது.

கருப்பு எள் விதைகள்: இந்த விதைகள் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலமாகும், இது முடி நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

சக்கரவள்ளி கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கில் ஏராளமாக உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.இது உச்சந்தலையில் ஆரோக்கியமான சரும் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஆரோக்கியமான முடி வளர்வதற்கு உதவுகிறது.

பாதாம்: பயோட்டின் நிறைந்த பாதாம் கெரட்டின் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் உங்கள் தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

கேரட்: பீட்டா கரோட்டின் நிரம்பிய கேரட், முடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, முடி நரைப்பதை தடுக்கிறது.

zeenews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments