இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.
Today I met with Minister of Energy Kumara Jayakody to discuss Sri Lanka’s energy future and our shared commitment to affordability, sustainability, and security. Through @USAIDSriLanka, we’re proud to support Sri Lankan partners driving climate adaptation in agriculture,… pic.twitter.com/22vA1K18xN
— Ambassador Julie Chung (@USAmbSL) December 9, 2024
இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்தனர்.
தூதுக்குழுவில் அமெரிக்க அபிவிருத்தி முகமையின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான துணைச் செயலாளர் ரொபேட் கப்ரோத் ஆகியோர் அடங்குவர்.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments