Ticker

6/recent/ticker-posts

Ad Code



Transparent OLED TV: உலகின் முதல் டிரான்ஸ்பரண்ட் டிவியை அறிமுகப்படுத்திய எல்ஜி... இதன் விலையை கேட்டா ஷாக் ஆகிவீங்க!


2 பெட்ரூம்களைக் கொண்ட பிளாட்டின் விலைக்கு நிகரான விலையில் உலகின் முதல் டிரான்ஸ்பரண்ட் ஓஎல்இடி டிவியை (Transparent OLED TV), எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் டிரான்ஸ்பரண்ட் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி (LG Signature OLED T) என அழைக்கப்படும், இந்த டிவி தற்போது அமெரிக்காவில் $60,000 (சுமார் ரூ. 51,10,800) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த செலவில், நீங்கள் டெல்லியில் 2 பெட்ரூம்களைக் கொண்ட (2BHK) பிளாட் வாங்கலாம். இந்தியா உட்பட பிற சந்தைகளில் அதன் அறிமுகம் குறித்த எந்த திட்டத்தையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

எல்ஜி நிறுவனமானது, சிஇஎஸ் 2024 (CES 2024) இல், இந்த தொலைக்காட்சியை முதன்முதலில் காட்சிப்படுத்தியது. நிறுவனம் அதை மேலும் ஒழுங்கமைக்க வயர்லெஸ் வீடியோ மற்றும் ஆடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைச் சேர்த்துள்ளதாக கூறுகிறது. எல்ஜி டிவியில், புத்தம் புதிய ஆல்பா 11 ஏஐ பிராசசர் இணைக்கப்பட்டுள்ளது, இது மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இது அதன் முந்தைய மாடல்களை விட 4 மடங்கு சிறந்த ஏஐ செயல்பாடு, 70% சிறந்த கிராஃபிக் செயல்பாடு மற்றும் 30% கூடுதல் வேகத்துடன் இயங்கும். எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி-இன் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களைப் இனி பார்க்கலாம்.

விலை எவ்வளவு?:

எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி (LG Signature OLED T) என அழைக்கப்படும், இந்த டிவி தற்போது அமெரிக்காவில் $60,000 (சுமார் ரூ. 51,10,800) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD) (3,840 x 2,160) ரெசொலூசன் கொண்ட 77-இன்ச் 4K ஓஎல்இடி பேனலுடன் வருகிறது. இந்த பேனல் வெளிப்படையாகவும், ஒளிபுகாதவாறு இருக்க, அதனை மாற்றியமைக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. டிவியில் டால்பி விஷன் மற்றும் 4K ஏஐ சூப்பர் அப்ஸ்கேலிங் அம்சமும் உள்ளது. மேலும் டிஸ்ப்ளேவில், மாறுபடும் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆட்டோ லோ லேடன்சி மோட் மூலம் டிவியின் இயக்கத்தை மேம்படுத்தி, சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது அடேப்டிவ் சின்க் அம்சத்தையும் கொண்டுள்ளது.

இது T-Objet (படங்கள் அல்லது கேலரியுடன் எப்போதும் டிஸ்ப்ளே மோடில் இருக்கும்), T-bar (அறிவிப்புகள், விளையாட்டுச் செய்திகள், வானிலை போன்றவை) மற்றும் T-Home (செட்டிங்ஸ் மற்றும் ஆப்ஸ் மற்றும் கிடைக்கக்கூடிய மற்ற சேவைகளுக்கான விரைவான அம்சம்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேம் பிரியர்களும் 4K 120Hz இல் கேம்களை விளையாடுகிறார்கள். இது எல்ஜியின் ஆல்பா 11 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

கூடுதலாக, டிவியில் ஜீரோ கனெக்ட் உள்ளது, இதில் ஈதர்நெட், வைஃபை 6E, யூஎஸ்பி 2.0 (USB 2.0), ப்ளூடூத் 5.1 மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) ஆகியவை அடங்கும். மேலும் இது 4.2-சேனல் ஸ்பீக்கருடன் ஏஐ, டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகியவற்றுடன் வருகிறது. இது ஒரு அதிநவீன வயர்லெஸ் தொழில்நுட்பமாகும், இது 4K ஒலி மற்றும் படங்களை அதன் இடத்தைப் பொருட்படுத்தாமல் ஓஎல்இடி டிவிக்கு அனுப்புகிறது.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments