
ஆஸ்திரேலியாவில் தமது மகளுக்கு முறையாக உணவளிக்கத் தவறிய பெற்றோருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயதான அந்த இளம் பெண்ணின் தந்தைக்கு 6 ஆண்டுச் சிறையும் தாய்க்கு 5 ஆண்டுச் சிறையும் நீதிபதி விதித்தார்.
வயதிற்கு ஏற்ற எடையும் உயரமும் அவரிடம் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பெண் சிறுவர்கள் காணும் கேலிச்சித்திரங்களைப் பார்க்கிறார் என்றும் சிறுவர்கள் கொண்டாடும் பாணியில் பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்றும் கூறப்பட்டது.
தமது மகள் 8 வயதிலிருந்தே சைவ உணவை மட்டுமே உண்பதாகப் பெற்றோர் வாதிட்டனர்.
ஆனாலும், இந்த அளவிற்கு மெலிந்து வயதிற்கு ஏற்ற வளர்ச்சியில்லாமல் அந்தப் பெண் இருப்பதால் நீதிபதி அவர்களின் வாதத்தை மறுத்தார்.
பலமுறை மகளின் வயதை மறைக்க பெற்றோர் முயன்றதும் தெரியவந்தது.
பெற்றோராகத் தங்கள் கடமையிலிருந்து தவறியபோதும் அதற்கு வருத்தப்படாத அவர்களைத் தண்டிப்பதே நியாயம் என்று நீதிபதி கூறியதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments