
கல்லூரி மாணவி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியம், படண்டா பகுதியில் ஆர் ஜி ஷிண்டே கல்லூரி உள்ளது. இங்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் இங்கு பயின்ற மாணவி வர்ஷா கரத் (20) மகிழ்ச்சியாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வர்ஷா மயங்கி விழுந்தார்.
உடனே, அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவிகள் வர்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments