Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-33


கபிவரகவலில் மற்ற பகுதிகளை, கபிலர்தான் எழுதினார் என்று கூறும் ஆய்வாளர்கள், தனது உடன் பிறப்புகளையும், தாய் தந்தையரைப் பற்றியும் கூறும் பாடலை மட்டும் கபிலர் எழுதியது அல்ல என்று மறுப்பது வேடிக்கைக்கு உரியது.

இப்படி ஆய்வாளர்கள மறுத்துரைக்க ஒரு காரணமும் கண்டு சொல்கிறார்கள். அதாவது கபிலரகவலில் வரும் அவரது பிறப்பு வரலாறு. எளிய நடையில் இருக்கிறது என்று. இந்த ஒரு காரணத்தை வைத்து, அப்பகுதியை கபிலர் எழுதியது இல்லை எனவும், அப்பகுதியை பிற்காலத்தில் மற்றவர்களாவ் எழுதிச் சேர்க்கப்பெற்றவை என்றும் கூறுவது சரியான ஆய்வாகத் தெரியவில்லை. கற்றறிந்த சான்றோர்களே. நீங்களே யோசியுங்கள், மேற் சொன்னவற்றில் உண்மை புலப்படும்!

இனி. நாம் இந்நூலுக்காக திருவள்ளுவருக்கு வருவோம்.

எடுத்துக்கொண்டஆதியும், பகவனும், திருமயிலாப்பூரில் வாழ்ந்து வந்த வேளையில் திருவள்ளுவர் பிறந்தார் என்ற செய்தியை நாம், முன்னே அறித்தோம். வள்ளுவர், குழந்தையாக இருக்கும்போதே. அவரது தாய் தந்தையரானஆதியும் பகவனும், அவர்கள் வாழ்ந்த இல்லத்தின் அருகே, ஒரு ஆண் மகவுக்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு வேளாளத் தம்பதியருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர், தங்களது குழந்தையான திருவள்ளுவரை.

திருவள்ளுவரும். வேளான் குடும்பத்திலே வளர்ந்து வருகின்ற வேளை, அந்த வேளாளனின் உறவினர்கள், இக்குழந்தையைப் பார்த்து, இக்குழந்தை . எந்த இனத்தைச் சேர்ந்ததோ, எந்த ஆணும் பெண்ணும் ஆடியக் காமத்தால் பிறந்ததோ, இது என்ன நம் குலப் பெருமைக்கே இழுக்காக இருக்கிறதேயென பலவாறு கூறினர்.

அவ்வேளாளனும் மனம் நொந்து பல நாட்கள் யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தவனாய், தமது விளை புலத்திலே உழவுத் தொழில் செய்து கொண்டிருக்கின்ற, பறைக் குடும்பத்திற்கே குருவாய் விளங்குகின்ற வள்ளுவனை அழைத்து. அவனது கையில் இக்குழந்தையைத் தந்து, "இக்குழந்தையைப் பொன்போல போற்றி வளர்க்க!" எனக் கூறி பொன்னும் மணியும் தந்து வாழ்த்தினான்.

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments