
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பிலிப் சால்ட், விராட் கோலி களமிறங்கினர்.
முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சால்ட் அடுத்த பந்தில் போல்டாகி வெளியேறினார். பின்னர் இணைந்த தேவ்தத் படிக்கல் – விராட் கோலி இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. 2-ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த கோலி 67 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணந்த பட்டிதார் – ஜிதேஷ் சர்மா இணை மும்பை பவுலிங்கை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவரில் சிக்சர்கள் பறக்க அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. . 19 பந்துகளில் 4 சிக்சருடன் ஜிதேஷ் சர்மா 40 ரன்களும், 32 பந்துகளில் பட்டிதார் 64 ரன்ளும் எடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 221 ரன்கள் எடுத்தது
இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் தலா 17 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் – சூர்யகுமார் இணை ஓரளவு ரன்கள் சேர்த்தது.
ஜேக்ஸ் 18 பந்துகளில் 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த திலக் வர்மா – ஹர்திக் பாண்ட்யா இணை ஆர்சிபி பவுலிங்கை அடித்து நொறுக்கியது. குறிப்பாக பாண்ட்யா 15 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்தார்.
திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருவரும் 89 ரன்கள் சேர்த்தனர். கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புவனேஸ்வர் குமார் வீசிய 19 ஆவது ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் முதல் 2 பந்துகளில் மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 3 ஆவது பந்தை வைடாக க்ருனால் பாண்ட்யா வீச, மறுபடியும் வீசப்பட்ட பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது.
4 ஆவது பந்தை பேட்ஸ்மேன் நமன்திர் பவுண்டரிக்கு அனுப்ப, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆர்சிபி அணியில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுகளும், யஷ் தயாள், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments