
தேவையான பொருட்கள்
கம்பு - 100 கிராம்
தண்ணீர் - 1 கப் + 7 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது
கஞ்சி தயாரிப்பு முறை
முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவி, வடிகட்டி தனியாக வைத்து விட்டு, ஒரு சுத்தமான மிக்ஸியில் கம்பை போட்டு ரவை போன்று அரைத்து கொள்ளவும்.
பின்னர், அதில் 1 கப் நீர் ஊற்றி, கலந்து விட்டு தனியாக வைக்கவும். அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்க விடவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், கறிவேப்பிலை சேர்க்கவும். சரியாக 7 கப் அளவு நீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை குறைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு கஞ்சி தயார்!
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments