
சிங்கப்பூர் செரிமான பிரச்சினைகளைக் கையாளும் வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் கைகொடுக்கத் தேசியப் பல்கலைக்கழகச் செரிமானச் சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தீர்வுகளைப் புதிய நிலையம் ஒரே கூரையின்கீழ் வழங்கும் என்று தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்தது. நிலையத்தில் விரைவான சிகிச்சை அளிக்கப்படுவதோடு மருத்துவமனைக்குச் செல்லும் அவசியத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.
செரிமானம் சம்பந்தப்பட்ட பராமரிப்பை அது உருமாற்றும் என்று கருதப்படுகிறது. அங்கு முக்கிய சிகிச்சையும் பராமரிப்பும் வழங்கப்படும்.
நாள்பட்ட கல்லீரல் நோய்கள், பெருங்குடல் பிரச்சினைகள், குடலில் வீக்கம் அவற்றுள் அடங்கும். சோதனைகளுக்கும் நிபுணர் ஆலோசனைகளுக்கும் காத்திருக்கும் நேரம் குறையும். நோயாளிகள் ஒரே நாளில் தகுந்த நிபுணர்களைச் சந்திப்பதற்கான வசதிகள் செய்துதரப்படும்.
சிங்கப்பூரில் 2022 முதல் 12,000க்கும் அதிகமான நோயாளிகள் நாள்பட்ட கல்லீரல் நோய்களுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைகளை வீட்டிலேயே பெறக்கூடிய வசதியையும் நிலையம் செய்துதரும்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments