Ticker

6/recent/ticker-posts

Ad Code



பூமியில் மனிதர்களை காப்பாற்ற முடியாதபோது, விண்வெளி குறித்து ஆராய்வதில் என்ன நியாயம்?


இன்று உலக மக்கள் ஒருபோதும் இல்லாத அளவுக்கு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். 

போர்கள், பசியால் இறப்பவர்கள், கொலை, இயற்கை பேரழிவுகள் என மனிதர்கள் தினமும் அழிவின் வழியிலே செல்கிறார்கள். உணவுவில்லாமல்  மக்கள் தவிக்கின்றனர். உறங்க இடமில்லாமல் தவிக்கின்றார்கள்.இவை அத்தனையும் நம் கண்முன்னே நடக்கின்றன.

நாம் அன்றாடம் சம்பாதிப்பதை தொழில்நுட்பம் பரித்துவிடுகின்றது.உன்ன உணவில்லை என்றாலும்,தொழில்நுட்பம் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
ஆனால், அதே நேரத்தில் உலகின் பெரும்பாலும் வளமுள்ள நாடுகள், மனிதர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பல கோடி பணங்களை செலவழிக்கின்றன.தினமும் புதிய தொழில்நுட்பங்கள் உடுவெடுக்கின்றன.

மனித வாழ்க்கையை பாதுகாப்பதற்குப் பதிலாக, கிரகங்களில் உயிர் இருக்கிறதா என ஆராய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம். பூமியில் உயிரை காப்பாற்ற முடியாதபோது, விண்வெளியில் உயிரைக் குறித்து ஆராய்வதில் என்ன நியாயம் உள்ளது?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு அவசியம். ஆனால் உண்மையான முன்னேற்றம் என்றால் அது மனிதனை பாதுகாக்கும் செயல்களில் இருக்க வேண்டும். நாம் பசியால் தவிக்கும் ஒரே ஒரு குழந்தையை கூடத் தழுவ முடியவில்லை என்றால், எத்தனை விண்கலம் அனுப்பினாலும் அதனால் நமக்கென்ன பெருமை?

இந்த உலகம் நம்மிடமிருந்து இரக்கம் எதிர்பார்க்கிறது. உணவின்றி தூங்கும் ஒரு மனிதனை உணவளிக்க முடியாத சமுதாயமாக நாம் இருக்கக்கூடாது. நாம் முதலில் பூமியை பாதுகாக்க வேண்டும்; பிறகு தான் விண்வெளிக்குச் செல்ல வேண்டியது.

இப்போது எடுக்கப்படும் முடிவுகள் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும். மனித வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். மனிதர்களை மேம்படுத்தும் முனைப்பில் முதலீடு செய்யுங்கள். பின்னர் நாம் உண்மையான நாகரிகம் பெற்றவர்கள் என்ற பெருமையை ஏற்க முடியும்.

மாஸ்டர்


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

1 Comments

  1. சிறப்பான பதிவு

    ReplyDelete