
அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில் கடுமையான வெள்ளம். 13 பேர் மாண்டனர்.
20க்கும் அதிகமான பிள்ளைகளைக் காணவில்லை.
கோடை விடுமுறை முகாம்கள் நிறைந்த டெக்சஸ் ஹில் பகுதியில் சில மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை முக்கால் மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.
குவாடலுப்பே (Guadalupe) ஆற்றின் நீர்மட்டம் 26 அடி உயர்ந்ததால் மோசமான வெள்ளம் ஏற்பட்டது என்று டெக்சஸ் ஆளுநர் கூறினார்.
ஆற்றோரத்தில் இருந்த Camp Mystic கோடை விடுமுறை முகாமில் சுமார் 700 பிள்ளைகள் இருந்தனர்.
அவர்களில் 23 பிள்ளைகளைக் காணவில்லை.
பிள்ளைகளின் நிலை அறியாத குடும்பத்தார் சமூக ஊடகத்தில் பதற்றத்தைப் பதிவிட்டுள்ளனர்.
கோடை விடுமுறை முகாமிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பிள்ளையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று முகாமின் நிர்வாகம் கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேகமான நீரோட்டத்தில் பிள்ளைகளைத் தேட அதிகாரிகள் போராடுகின்றனர்.
ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments