Ticker

6/recent/ticker-posts

சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை (Shasheendra Rajapaksa) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் (19) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் ஓகஸ்ட் 6 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல-கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்தில் சேதமடைந்த கட்டிடத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments