
H 1B Visa American Woman Leaving Husband : அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, நிரந்தர குடியுரிமைக்கான க்ரீன் கார்டு வைத்திருக்கும் தனது அலுவலக நண்பரை திருமணம் செய்யலாமா என்று கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H-1B விசாவுக்கான கட்டணத்தை 1லட்சம் டாலராக உயர்த்திய பின்னரே, இந்த முடிவை எடுத்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.
இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.இந்நிலையில்தான், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து இது பல குடும்பங்களை பந்தாடி வருகிறது. விசா கிடைக்காது என்பதால் பலரும் திருமணத்தை நிறுத்துவது. விவாகரத்து செய்வது என கிளம்பியுள்ளனர்.
அந்த வகையில், பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், "என் கணவர் H-1B விசா வைத்திருக்கிறார். நான் H-4 விசா வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் என் கணவரின் விசா நீட்டிக்க முடியாமல் போனால் என்ன ஆகும் என்ற மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் அலுவலகத்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற கிரீன் கார்ட் வைத்திருக்கும் ஒரு சக ஊழியர் என்னை பெரிதும் விரும்புகிறார். நான் என் கணவரை விவாகரத்து செய்து அவரைத் திருமணம் செய்யலாமா?" என்று கேட்டிருந்தார்.இந்தப் பதிவு வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், இது வெறும் கவன ஈர்ப்புக்கான பதிவு என்றும், இதுபோன்ற பதிவுகள் தவறான செய்திகளை பரப்பும் என்றும் விமர்சித்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. H1B விசாவால் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியப்போகிறதோ?
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments