
பூட்டான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் கிரிக்கெட் அணி அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடரின் 3வது போட்டி கேல்பு மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மயான்மர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பூட்டான் 20 ஓவரில் போராடி 127/9 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக நமங் செஜய் 50* (45), நம்கே தின்லே 27 (22) ரன்கள் எடுத்தார்கள். மயான்மர் அணிக்கு அதிகபட்சமாக துயா அங், லின் து, பியா பையோ தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக 128 ரன்களை துரத்திய மயான்மார் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பியா பைதோ 10, லின் ஓ 12 ரன்களில் பூட்டான் ஸ்பின்னர் சோனம் எஸ்ஸே சுழலில் அவுட்டானார்கள்
அதே போல 3, 4வது இடங்களில் களமிறங்கிய லின் து, கேப்டன் லின் அங் ஆகியோரும் அடுத்தடுத்து அவருடைய சுழலில் டக் அவுட்டானார்கள்.
லோயர் ஆர்டரில் கின் ஆயே 2, துயா அங் 0, கௌங் க்யாவ் 2, ஸ்வி பைங் 0 என அடுத்து வந்த வீரர்களும் அவருடைய மாயாஜால சுழலில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள். இறுதியில் து அங் 7* (9) ரன்கள் எடுத்தும் 9.2 ஓவரில் மயான்மர் வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பூட்டான் அணிக்கு அதிகபட்சமாக சோனம் எஸ்ஸே 8! ஆனந்த் மொங்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். குறிப்பாக 4 ஓவர்களைப் போட்ட சோனம் ஒரு மெய்டன் உட்பட 7 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் 2023இல் சீனாவுக்கு எதிராக மலேசியாவின் சியாஸ்ருல் இட்ருஸ் 8 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே போல 2025இல் பூட்டானுக்கு எதிராக பக்ரைன் அணியின் அலி தாவுத் 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆனால் சோனம் மட்டுமே முதல் முறையாக 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
அதே காரணத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பூட்டான் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் மற்றொரு கத்துக் குட்டியான மயான்ருக்கு எதிராக அவர் படைத்துள்ள இந்த சாதனை பலரையும் பாராட்ட வைப்பதாக அமைகிறது. எனவே அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments