
ஒரு மாதம் நீங்கள் டீ, காஃபியை கைவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?
தேநீர் அல்லது காஃபி அருந்தும் பழக்கத்தை கைவிடுவதன் மூலம், நம்மால் இதயம், பற்கள், வயிறு, மூளை, சருமம் என அனைத்தின் நலனையும் மேம்படுத்த முடியும் என சொன்னால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும், அதுதான் நிஜம்! உண்மையில் தேநீர் அருந்துவதை ஒரு மாதத்திற்கு கைவிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும்? இங்கே விரிவாக பார்க்கலாம்.
1) கஃபைனை கைவிடுவதால், நல்ல உறக்கம் கிடைக்கும். கஃபைன் என்பது, உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும் தன்மை கொண்டது. ஆனால் அதுவே நாள்படும்போது, தூக்க பிரச்னைகளை ஏற்படுத்திவிடக்கூடும். அப்படியான கஃபைனை தவிர்ப்பதென்பது, நல்ல தூக்கத்துக்கு உதவும்.
2) முதிர்ந்த தோற்றம் கிடைப்பதை தடுக்க முடியும். ஏனெனில் கஃபைன், கொலேஜன் எனப்படும் சருமத்தை இறுக்கமாக்கும் புரத உற்பத்தியை தடுக்கும் சக்தி கொண்டிருப்பதால் டீ, காஃபி குடிக்கும்போது இளம்வயதில் முதிர்ந்த தோற்றம் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும்போது, நீண்டகாலத்துக்கு இளமையாக இருக்க முடியும்.
3) மூளை செயல்பாட்டை இன்னும் சுறுசுறுப்பாக மாற்ற முடியும். கஃபைன், ஒருவகை போதையை மூளைக்கு கொடுத்து, தனக்கு அதை அடிமையாக்கும் தன்மை கொண்டது. இதனால் கஃபைனை தவிர்க்கும் முதல் வாரம், மிகவும் சோர்வாக உணர்வோம். ஆனால் நாள்போக போக, மூளை தனது பழைய நிலைக்கு சுறுசுறுப்பாக மாறிவிடும்.
4) பளபளப்பான, பளிச் நிற பற்களை பெற முடியும். காஃபி, சோடா, டீ போன்றவை பற்களில் கறை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இது நாள்போக்கில் பற்களின் நிறத்தை மாற்றி அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடும். மட்டுமன்றி, கஃபைன் வாயில் எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தி வறட்சியை ஏற்படுத்தும். இதனால் நாள்போக்கு பற்சிதைவுகூட வரலாம். டீ, காஃபியை தவிர்ப்பதால் அதை தடுக்க முடியும்.
5) கஃபைன் எப்போதும் ரத்த அழுத்தத்தை உயர்த்தும் அபாயம் கொண்டவை. அப்படிப்பட்ட கஃபைனை தவிர்க்கும்போது, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
என்னதான் பல நன்மைகள் இருந்தாலும், அன்றாடம் டீ - காஃபி குடித்து பழக்கப்பட்டவர்களுக்கு அதை விடுவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். முதல் ஒரு வாரத்துக்கோ பத்து நாட்களுக்கோ தலைவலி, சோர்வு, தூக்கமின்மை, மனநல பிரச்னைகள், கவனமின்மை போன்றவை ஏற்படலாம். அதுபோன்ற நேரத்தில், டீ காஃபியை நோக்கி செல்லாமல் மனதை ஒழுங்குப்படுத்தி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியது அவசியம்.
டீ காஃபியை கைவிடுவதால் ஏற்படும் பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிர்ப்பவர்கள், அதற்கு பதிலாக கஃபைன் சேர்க்காத மூலிகை தேநீரை அருந்தி வரலாம். உதாரணமாக புதினா டீ, க்ரீன் டீ, செம்பருத்தி டீ போன்றவற்றை அருந்தி வரலாம். இவை எல்லாவற்றுக்கு மேலாக நிறைய தண்ணீர் குடிப்பது, கஃபைனை கைவிடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு மாதம் ஆகிவிட்டது என மறுபடியும் டீ, காஃபியை நோக்கி சென்றுவிடாதீர்கள். வாழ்நாள் முழுக்க அதை பின்பற்றுங்கள்!
கஃபைனை கைவிட்ட 2-வது வாரமே பெரும்பாலும் உடல் ஆரோக்கியமான, தெளிவான மனநிலைக்கு வந்துவிடும். இதனால் நல்ல தூக்கம் கிடைத்து மூளையும் இதயமும் நன்கு செயல்படும். இதற்கு அடுத்தபடியாக 3, 4-வது வாரங்களில் அமிலச்சுரப்பு பிரச்னைகள், உப்புசம், நெஞ்செரிச்சல் பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக 4-வது வாரம் சருமம் பளபளப்பாகி, ஊட்டச்சத்துக்கள் நன்கு உட்கரிக்கப்பட்டு, உங்களால் புத்துணர்வோடும் பளிச்சென்றும் கவனத்தோடும் செயல்பட முடியும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments