Ticker

6/recent/ticker-posts

10 மகள்களை பெற்ற தம்பதிக்கு 11வது பிரசவத்தில் ஆண் குழந்தை..!


ஹரியானாவில் கூலித் தொழிலாளர் தம்பதிக்கு 10 பெண் பிள்ளைகளுக்குப் பிறகு 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பொருளாதாரச் சுமை, குழந்தை வளர்ப்பிற்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாதது, கூட்டுக் குடும்பங்கள் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்தியக் குடும்பங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் எனச் சுருங்கின. பின்னாளில், இது நாம் இருவர் நமக்கு ஒருவர் என மாறியது. ஆனால், தற்போது இது Childfree By Choice எனவும், DINK எனவும் ஒரு படி மேலே சென்றுள்ளது. Double Income, No Kids என்பதைத்தான் சுருக்கமாக DINK என அழைக்கின்றனர் 2K Kids. DINKWAD... இது DINK-ன் ஒரு நவீன வடிவம். இதன் விரிவாக்கம்: Double Income, No Kids, With A Dog ஆகும். குழந்தைகளுக்குப் பதிலாக நாய்களை வளர்க்கும் தம்பதிகளை இது குறிக்கிறது.

நிலைமை இப்படி சென்றுக்கொண்டிருக்க ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளி ஒருவர் 11-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 2007-ல் திருமணம் செய்துகொண்ட சஞ்சய் குமார் தம்பதிக்கு முதலாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை வேண்டும் எனக் கருதிய அத்தம்பதி மீண்டும் மீண்டும் முயல அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், 37 வயதான சஞ்சயின் மனைவி மீண்டும் கருத்தரித்தார். இந்த முறை அவர் விரும்பியது போலவே 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது மிகவும் ஆபத்தான பிரசவம் என்றாலும் தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் நர்வீர் ஷியோரன் குறிப்பிட்டுள்ளார். தம்பியின் வரவால் மகிழ்ச்சியடைந்துள்ள சகோதரிகள், அவருக்கு Dilkhush எனப் பெயரிட்டுள்ளனர். சஞ்சய் குமாரின் மூத்த மகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு கூலித் தொழிலாளியின் வருமானத்தில் 10 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை எப்படி வளர்த்தெடுப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். "பெண் குழந்தைகளும் ஆண்களுக்கு நிகரானவர்களே" என்ற விழிப்புணர்வு பெருகி வரும் காலத்தில், ஆண் குழந்தைக்காக 11 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பழைய சிந்தனை முறையையே காட்டுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

news18

 


Post a Comment

0 Comments