Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-10


மெய்யுணர்தல்

குறள் மொழி 36

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

குறள் எண்: 355

பொருள்:

எந்தப் பொருளானாலும் சரி... அது எத்தகைய இயல்புடையதாகக் காணப்பட்டாலும் சரி... அந்தப் பொருளின் உண்மைத் தன்மையை, அதில் பொதிந்து இருக்கும் உண்மையை உணர்ந்து ஆராய்ந்து அறிவதே தெளிந்த அறிவாகும்.

நபிமொழி:

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்கு உள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?.அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், மற்றும் உங்களுக்காக வாக்களிக்கப்பட்டவையும் இருக்கின்றன. ஆகவே, வானங்கள், பூமி மீது ஆணையாக! நீங்கள் பேசும் வார்த்தையைப் போல இது பிரத்தியட்சமான உண்மையாகும்.

இறைவசனம், (திருக் குர்ஆன் : 51:20-23)

வாய்மை

குறள் மொழி 37

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.

குறள் எண்:296

குறள் மொழியின் பொருள்:

"பொய் பேசாத நிலை" போன்ற புகழ் வேறு இல்லை. அப்பண்பானது, அவன் அறியாமலேயே எல்லா நன்மைகளையும் அவனுக்குக் கொடுக்கும்.

நபிமொழி:

உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும், நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.

அதுபோல, பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழிவகுக்கும் என்று இறை தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 5083)

(தொடரும்)

 


Post a Comment

0 Comments